Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிர்மலாதேவி விவகாரம்: குரல் பரிசோதனையை முன்னெடுக்க உத்தரவு!

In இந்தியா
Updated: 11:00 GMT, Jun 25, 2018 | Published: 11:00 GMT, Jun 25, 2018 |
0 Comments
1061
This post was written by : Kemasiya

குரல் மாதிரி பரிசோதனைக்காக, நிர்மலாதேவியை சென்னைக்கு அழைத்து செல்ல சி.பி.சி.ஐ.க்கு சிறைத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி, பெண் மாணவிகளை தகாத செயலுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நீதிமன்றம் மேற்படி அனுமதியை இன்று வழங்கியுள்ளது.

மாணவர்களை தகாத செயலுக்காக கட்டாயப்படுத்திய ஒலிப்பதிவொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ள நிலையில், தான் பேசியது உண்மை என்று நிர்மலாதேவி ஒத்துக்கொண்டுள்ளார்.

எனினும் இன்று தான் பேசியதை ஒப்புக்கொள்ளும் நிர்மலா பின்னர் பொலிஸார் விரட்டியதால் தான் ஒப்புக்கொண்டேன் என மாற்றி பேசினால் வழக்கு மாறக் கூடும் என்ற கோணத்திலேயே அவரிடம் குரல் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg