Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போர்க்குற்றச்சாட்டு: ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கு வீரர்களை அனுப்பும் பணிகள் தாமதம்

In இலங்கை
Updated: 11:02 GMT, Jun 25, 2018 | Published: 10:43 GMT, Jun 25, 2018 |
0 Comments
1122
This post was written by : Risha

இலங்கை இராணுவத்தினர் மீது கடந்த காலங்களில் சுமத்தப்பட்டுவந்த போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக, ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கு இலங்கை வீரர்களை அனுப்பும் பணிகள் தாமதிக்கப்பட்டுள்ளன.

அமைதிகாக்கும் பணிக்கு தரமானவர்களை தெரிவுசெய்யும் பணிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தாமதித்து வருகின்றமையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணிக்காக அனுப்பப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் மீது பாலியல் மீறல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இவ்வாறான பல்வேறு போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இலங்கை இராணுவத்தினரை தனது அமைதி காக்கும் படையில் இணைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை அனுமதியளித்தது. இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு நீதி எட்டப்படாது ஆயிரக்கணக்கான இலங்கை இராணுவத்தினரை ஐ.நா தனது அமைதி காக்கும் படையில் இணைத்தமையால் உலக நாடுகளிலும் இவ்வாறான குற்றங்களில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டது.

அதனால், எதிர்காலத்தில் அமைதி காக்கும் படைக்கு வீரர்களைத் தெரிவு செய்யும் போது தரமானவர்களைத் தெரிவு செய்வது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுமதியை பெற வேண்டும் என்ற சட்டம் கடந்த மார்ச் மாதம் அமுல்படுத்தப்பட்டது.

அதற்கமைய எதிர்காலத்தில் இலங்கையிலிருந்து அனுப்பப்படும் வீரர்கள் தொடர்பாக 2005இற்கு பின்னரான தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அவர்கள் இராணுவத்தில் பணியாற்றும் போது மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டே அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்;. அதற்கமைய இப்பணிகள் தாமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg