Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்

In ஆன்மீகம்
Updated: 15:27 GMT, Jun 25, 2018 | Published: 15:27 GMT, Jun 25, 2018 |
0 Comments
1103
This post was written by : Yuganthini

சிலாபம்-முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதசுவாமி ஆலயத்தின் இராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

குறித்த கும்பாபிஷேகம் ஆலயத்தின் பிரதம குருவும் தர்மகர்த்தாவுமான பிரம்ம ஸ்ரீ எஸ்.பத்மநாபக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை கர்மாரம்பம் ஆரம்பமானதுடன் சனிக்கிழமையும் பல பூஜைகளும் இடம் பெற்றன.

இந்நிலையில் இன்று காலை யாகபூஜை, காலம் 06, மஹாபூர்ணாகுதி,விஷேட தீபாராதனை,அந்தர்பலி,பஹிர்பலி,கும்பங்கள் வீதி பிரதக்ஷணம்,இராஜகோபுர மஹாகும்பாபிஷேகம் தொடர்ந்து ஸ்ரீ வடிவம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்வாமி அபிஷேகம் விஷேட பூஜை பிரசாதம் வழங்குதல் ஆகியன நடைபெற்றது.

இந்த இராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் நிகழ்வுக்கு இந்து சமய கலாச்சார அமைச்சர் சுவாமிநாதன் வருகை தந்ததுடன் இன மத பேதமின்றி அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg