Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா!

In ஆன்மீகம்
Updated: 14:22 GMT, Jun 26, 2018 | Published: 14:22 GMT, Jun 26, 2018 |
0 Comments
1115
This post was written by : Ravivarman

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

மூன்று தேர்களில், முதலில் விநாயகர் வலம்வர நடுவிலே சிவன் வலம்வர மூன்றாவது தேரில் முருகப்பெருமான் தேரேறி வலம்வந்தார்.

இன்று நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு கொண்டதுடன் பறவைக்காவடி, பால்காவடி, அங்கப்பிரதட்டை, அடிஅழித்தல், கற்பூரச்சட்டி, பாற்செம்பு எடுத்தல் போன்ற நிவர்த்திக்கடன்களையும் நிறைவேற்றினர்.

ஈழத்தில் உள்ள சிவ ஆலயங்களில் சிறப்புமிக்கதும் சுயம்பு லிங்கத்தையும் உடையது இந்த ஆலயத்தின் பெருமையாகும். ஒட்டுசுட்டானில் வாழ்ந்த பண்டைய விவசாயி ஒருவர் குரக்கன் கதிர்களைக் கொய்த பின்னர் அவ்விடத்தை தீயிட்டு எரித்தார்.

அப்பொழுது கொன்றைமரம் ஒன்றின் கீழ் பகுதி எரியாமல் இருந்ததை கண்ட அவர் அங்கு மண் வெட்டியால் வெட்டும்போது அக்கொன்றை மரத்தின் கீழே சிவலிங்கம் ஒன்று இருப்பதை கண்டார். இன்றும் இங்குள்ள சிவலிங்கத்தில் மண்வெட்டியால் வெட்டிய தழும்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg