Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் குறைவான ஊதியத்துடன் வேலை செய்யும் இளைஞர்கள்: சுட்டிக்காட்டும் உலக வங்கி

In வணிகம்
Updated: 10:35 GMT, Jun 30, 2018 | Published: 10:35 GMT, Jun 30, 2018 |
0 Comments
1033
This post was written by : Jeyachandran Vithushan

குறைந்தளவிலான ஊதியத்தை பெற்றுக்கொண்டு பணியாற்றுபவர்கள் இலங்கையில் இருக்கும் அதேவேளை, அதிகளவிலான  இளைஞர்கள் தொழில் இன்றி உள்ளதாக உலக வங்கியின் இலங்கை தொடர்பான அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கையில் 4 இலட்சத்து 97 ஆயிரம் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் பெறுபவர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ற தகைமையை குறிப்பாக இளைஞர்கள் பெறாதமையின் காரணமாகவே, இந்த வெற்றிடங்கள் நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதன் அவசியம் குறித்து இலங்கையில் நிலைகொண்டிருக்கும் உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இளைஞர் எதிர்நோக்கும் வேலையில்லாத் தன்மையினை நீக்குவதற்கு தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாத்துறையினரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், விருந்தக பணியாளர்களின் சேவை சிறந்த முறையில் அமைவதற்கு ஏற்ற வாய்ப்புக்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg