Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புலமைப்பரிசில் திட்டங்களுக்காக 379 மில்லியன் ரூபாவை வழங்கும் ஜப்பான்!

In வணிகம்
Updated: 16:55 GMT, Jul 2, 2018 | Published: 16:55 GMT, Jul 2, 2018 |
0 Comments
1047
This post was written by : Ravivarman

பொதுத்துறை அதிகாரிகளின் ஆற்றலை வளர்க்கும் நோக்குடன் மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் திட்டங்களுக்கமாக ஏறத்தாழ 379 மில்லியன் ரூபா பெறுமதியான மானிய உதவியை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமா மற்றும் நிதி ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோருக்கு இடையே நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சில் இந்த திட்டங்களை உறுதிசெய்யும் ஒப்பந்தம் கடந்தவாரம் கைச்சாத்திடப்பட்டது.

ஜப்பான் வழங்கியுள்ள 265 மில்லியன் யென் ( ஏறத்தாழ 379 மில்லியன் இலங்கை ரூபா) ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் இலங்கையின் பொதுத்துறையிலுள்ள நிறைவேற்று அதிகாரிகளை பயிற்றுவிப்பதற்காகப் பயன்படுத்தப்படும்.

தமக்குரித்தான துறைகளில் எதிர்காலத்திற்கான தேசியத் தலைவர்களின் நிர்வாக ஆற்றலை விருத்திசெய்யும் நம்பிக்கையிலேயே இந்த உதவி வழங்கப்படுகின்றது.

இந்த புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் 2019 முதல் 2021 வரையில் 2 வருட கால முதுமானி அல்லது கலாநிதிக் கற்கையை மேற்கொள்வதற்காக பொதுத்துறையைச் சேர்ந்த 17 அதிகாரிகள் அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)