Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுதந்திர தினத்தில் சுதந்திர தேவி சிலையில் ஏறி பரபரப்பை ஏற்படுத்திய பெண்!

In
Updated: 05:38 GMT, Jul 5, 2018 | Published: 05:38 GMT, Jul 5, 2018 |
0 Comments
1076
This post was written by : Risha

அமெரிக்காவின் நியூயோர்க் துறைமுகத்தில் உள்ள புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலைக்கு மேல் ஏறி பரபரப்பை ஏற்படுத்திவந்த பெண்ணை அதிகாரிகள் பாதுகாப்பாக கீழே இறக்கியுள்ளனர்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான வாசகம் பொறிக்கப்பட்ட மேற்சட்டையை அணிந்தவாறு சுமார் 100 அடி உயரத்தில் அமர்ந்துக் கொண்டு அனைவரையும் அச்சுறுத்திய சம்பவம் அமெரிக்க சுதந்திர தினமான நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றிருந்தது.

குறித்த பெண்ணை கீழே இறங்கி வருமாறு அதிகாரிகள் கோரியிருந்த போதிலும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் சுமார் 3 மணிநேரங்கள் வரை போராடி அவரை கீழே இறக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் குடியேற்ற கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர தேவி சிலையின் அடிவாரத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிலையில் ஏறிய பெண், ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரா என்பதனை அதிகாரிகள் இதுவரை உறுதிபடுத்தவில்லை.

இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படுவது தொடர்பாக அரச சட்டத்தரணிகள் தீர்மானிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)