Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை: வெள்ளத்தை ஈடு கொள்ள முடியாமல் தவிக்கும் மக்கள்

In இந்தியா
Updated: 06:17 GMT, Jul 5, 2018 | Published: 06:17 GMT, Jul 5, 2018 |
0 Comments
1110
This post was written by : Kemasiya

வட இந்தியாவில் குறிப்பாக அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கின் நிலைமை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 24 மணிநேரத்திற்கு முதல் நாள் தொடங்கி , நேற்று (வியாழக்கிழமை) வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்துள்ளதாகவும், இன்றும் அதே நிலைமை நீடிப்பதாகவும், காலநிலை மாற்றத்தால் தாம் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் ஊடகங்களிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரம்மபுத்ரா அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ளதாகவும், இது மேலும் ஆபத்தை உணர்த்துவதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த மழை காரணமாக 56 கிராமங்கள் வெள்ளப்பெருக்கிற்கு உள்ளாகியுள்ளதாகவும், 40000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகள், ஆலயங்கள் என பொது இடங்களிற்குள் தஞ்சமடைந்துள்ளனர்.

அத்தோடு இவர்களுக்கான நிவாரணங்களை மாநில அரசு வழங்கி வந்தாலும், இயல்பு வாழ்வை இழந்து அரசால் வழங்கப்படும் நிவாரணம் பற்றாக்குறையாக உள்ளதால் தேவைகள் நிறைவேற்றப்படாமல் அவதியுறுவதாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

மேலும் நாளுக்கு நாள் ஆறுகளிலும், அணைகளிலும் நீர்மட்டம் உயர்வடைவதாகவும், இது மென்மேலும் அச்சத்ததை தோற்றிவித்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)