Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது

In
Updated: 13:16 GMT, Mar 8, 2014 | Published: 10:29 GMT, Mar 8, 2014 |
0 Comments
1391
icon_com
This post was written by : Webmaster
8-march-2012-international-womens-day

international_womens_day_march-8

இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் இந்த நாள் அமையும். மகளிர் தினத்தன்று அம்மா, மனைவி, சகோதரி மற்றும் சக பெண் ஊழியர்களுக்கு ஆண்கள் பரிசுகள் வழங்குவது வழக்கம். சீனா, ரஷ்யா, ஆர்மேனியா, அசர்பெய்ஜான், பெலாரஸ், பல்கேரியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மசிடோனியா, மோல்டோவா, மொங்கோலியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் மகளிர் தினத்தை பொது விடுமுறையாக அறிவித்துள்ளனர்.

ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமைகளை வழங்க வேண்டும் என்று கேட்டு போராடியதை குறிப்பிடும் வகையில் கொண்டாடப்படுவதுதான் பெண்கள் தினம். அதனால்தான் இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் என பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்படுகிறது.  மார்ச் 8ம் திகதிக்கும் பெண்கள் தினதிற்குமான தொடர்பு

1789ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சமத்துவம், பிரதிநிதித்துவம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் நாட்டு பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமைகள் கிடைக்க வேண்டும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலை, வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ஆகிய முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து கொண்டு பாரிஸ் நகர தெருக்களில் அணி திரண்டனர். அந்நாட்டு அரசர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்வேன் என அறிவித்திருந்தார். ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டத்துடன் ஆண்களும், பெண்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர். கொட்டும் மழையிலும் அரசரின் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர். இதை எதிர்பாராத அரசர் அதிர்ந்து போய் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்து, அனைவரையும் சமாதானப்படுத்தினார்.

கிரீஸ், ஜெர்மனி, ஓஸ்திரியா, டென்மார்க், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியதால் அங்கும் போராட்டம் வெடித்தது. பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும் ஒப்புக்கொண்டார். அந்த நாள் 1848ம் ஆண்டு மார்ச் 8ம் நாள். அந்த தினத்தைத்தான் இன்று உலகம் முழுவதும் மகளிர் தினமாக கொண்டாடுகிறோம்.

கடந்த 1920ம் ஆண்டு சோவியத் ரஸ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரில் நடந்த பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஸ்யாவின் அலெக்ஸாண்டிரா செலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா. பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தகது.

INDIA-SOCIETY-WOMEN

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg