Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்திற்கு எதிர்ப்பு

In
Updated: 09:42 GMT, Jul 6, 2018 | Published: 09:42 GMT, Jul 6, 2018 |
0 Comments
1083
This post was written by : Johnson paiva

அமெரிக்க ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லண்டன் பாராளுமன்றத்தின் மேல் பொம்மை பலுான் ஒன்று பறக்கவிடப்படவுள்ளது.

இம்மாதம் 13-ம் திகதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானிய செல்லவுள்ளதையடுத்து அவரது உருவத்தில் செம்மஞ்சள் நிற குழந்தை பொம்மை பலுான் ஒன்று லண்டன் பாராளுமன்றத்தின் மேலே பறக்கவிடப்படவுள்ளது.

குறித்த ட்ரம்ப் உருவ பலுான் பறக்கவிடப்பட அனுமதிக்கவுள்ளதாகவும் அமைதியான முறையிலான போராட்டங்களுக்கான உரிமை வழங்கப்படவேண்டுமெனவும்  லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்ததாக லண்டன் மேயர் அலுவலக ஊடகப்பேச்சாளர் நேற்று (வியாழக்கிழமை) கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் பொலிஸார் மற்றும் விமான போக்குவரத்து அதிகாரிகளின் அனுமதி பெற்றபின்னரே குறித்த பலூனை பறக்கவிடமுடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு முன்னதாக அனுமதி வழங்கமாட்டோமென மேயர் அலுவலகம் அறிவித்ததாகவும் மக்களின் ஆதரவினாலும் தமது விடாமுயற்சியினாலும் அனுமதி வழங்கப்படவுள்ளதெனவும் பலுான் பறக்கவிடும் ஒருவர் தெரிவித்துள்ளர்.

கடந்த வருடம் அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ட்ரம்பின் இந்த பிரித்தானிய விஜயம் 100 வருடங்களுக்குப் பின்னர் அமெரிக்க தலைவர் பிரித்தானியாவிற்கு வருவது என்பதும் இவ்விஜயத்தின் போது பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மே மற்றும் அந்நாட்டின் எலிசபெத் மகாராணியை சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)