Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய, பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு

In
Updated: 11:37 GMT, Jul 6, 2018 | Published: 11:37 GMT, Jul 6, 2018 |
0 Comments
1066
This post was written by : Johnson paiva

விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய, பிரித்தானிய உச்சநீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

இந்திய கடன் மீட்பு தீர்ப்பாணையம், பிரித்தானிய உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த, நீதிபதி பைரன், பிரித்தானியாவிலுள்ள மல்லையாவின் சொத்துகளை ஆய்வு செய்யவும், பறிமுதல் செய்யவும், அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, லண்டனுக்கு அருகில் உள்ள ஹெர்ட்போர்டுஷயர் பகுதியில், மல்லையாவுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் விடுதிகளை, அதிகாரிகள் ஆய்வு செய்து, பறிமுதல் செய்யவுள்ளனர். இதனால், கடன் கொடுத்து பாதிக்கப்பட்ட இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இதற்கிடையே லண்டன் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனு நிலுவையில் உள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, மதுபான நிறுவன தொழில் அதிபரான, விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, அவற்றை திருப்பிச் செலுத்தாமல், பிரித்தானியாவிற்கு தப்பி ஓடினார். இதையடுத்து, உலகின் பல்வேறு இடங்களில் உள்ள, மல்லையாவுக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்ய, இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)