Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கில் மீன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

In வணிகம்
Updated: 11:44 GMT, Jul 6, 2018 | Published: 11:44 GMT, Jul 6, 2018 |
0 Comments
1029
This post was written by : Jeyachandran Vithushan

வடமாகாணத்தில் கடற்றொழில் துறையில் முதலீடு மற்றும் தொழில்வாய்ப்பிற்கான சந்தர்ப்பத்தை அதிகரித்து, மீன் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக வடமாகாண பேண்தகு கடற்றொழில் அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பருத்தித்துறை மற்றும் பேசாலை ஆகிய இடங்களில் 2 கடற்றொழில் துறைமுகங்களும் யாழ்ப்பாணம் மண்டைதீவில் நங்கூரம் இடுவதற்கான வசதியையும் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 23 கடற்றொழில் இறங்குதுறைகளை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த திட்டத்திற்காக அரசாங்கதினால் 201 அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நிதியை முதலீடு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)