Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆறு வயது சிறுமி கொலை வழக்கில் பதினாறு வயது சிறுவன் தடுப்புக் காவல்

In
Updated: 05:18 GMT, Jul 7, 2018 | Published: 03:36 GMT, Jul 7, 2018 |
0 Comments
1233
This post was written by : Johnson paiva

பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து பகுதிக்கு உட்பட்ட ரோத்ஸே நகரில் 6 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொன்ற 16 வயது சிறுவனை பொலிஸார் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த 6 வயது சிறுமியான அலேஷா மக்பைல் வாழ்ந்த வீட்டின் அருகே நின்றிருந்த ஒரு காரை தடயமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அலேஷா மக்பைல் குடும்பத்தாருக்கு நன்கு பழக்கமான 16 வயது சிறுவனை நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்து க்ரினாக் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி குறித்த சிறுவன் பொலிஸாரினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் அடுத்த வாரம் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தப்படுவரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் வகுப்பில் படித்துவந்த சிறுமி அலேஷாவின் மறைவு அவரது உறவினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மத்தியிலும் ஆறாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)