Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்!

In இலங்கை
Updated: 06:40 GMT, Jul 7, 2018 | Published: 06:40 GMT, Jul 7, 2018 |
0 Comments
1071
This post was written by : Ravivarman

கொழும்பு, புறக்கோட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) காலை ஏற்பட்ட இந்த தீ பரவலில் இரண்டு வர்த்தக நிலையங்கள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதுடன் பெறுமதி வாய்ந்த பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த வர்த்தக நிலையங்களில் ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக புறக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்புத் துறையினர் குறித்த தீயினை அணைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவத்தில் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)