Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கியுபெக் மாகாணத்தில் கடும் வெப்பம்: உயிரிழப்புக்கள் 54 ஆக அதிகரிப்பு!

In கனடா
Updated: 10:03 GMT, Jul 7, 2018 | Published: 07:19 GMT, Jul 7, 2018 |
0 Comments
1029
This post was written by : Jeyachandran Vithushan

கியுபெக் மாகாணத்தில் நிலவும் அதிக வெப்பமான காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதில் மொன்றியல் பகுதியில் மட்டும் அதிகளவில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் இருந்து குறித்த பகுதியில் அதிகளவிலான வெப்பமான காலநிலை நிலவிவருகின்றது. இதன் காரணமாக ஏற்கனவே 33 பேர் உயிரிழந்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்த நிலையில் சுகாதார அதிகாரிகள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

குறித்த பகுதியில் தொடரும் அனல் நிறைந்த வெப்பம் (45C) காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்று சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் 36′ C வெப்பநிலை காணப்படும் எனவும் மக்களுக்கு வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், முதலுதவிகள் மற்றும் சிகிச்சை தேவைகளுக்கு அவசர மருத்துவ சேவை பிரிவிற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)