Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய தேர்தல் முறைமையைப் புறக்கணிக்கின்றோம்: றிஷாட்!

In இலங்கை
Updated: 09:14 GMT, Jul 7, 2018 | Published: 09:14 GMT, Jul 7, 2018 |
0 Comments
1028
This post was written by : Ravivarman

புதிய தேர்தல் முறைமையை முற்றாக புறக்கணிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணையின் மீதான விவாதத்தின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அரசாங்கம் தேர்தலை நடத்தாது இழுத்தடிப்புச் செய்து வருவதால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருகின்றனர்.

மேலும் மாகாண எல்லை நிர்ணய அறிக்கையையும் சிறுபான்மையினரால் ஏற்றுக்கொள்ள முடியாது. புதிய தேர்தல் முறைமையால் நேரடியாகப் பாதிக்கப்படுவது சிறுபான்மை மக்கள்தான்.

எனவே குறித்த புதிய தேர்தல் முறையினை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பொருத்தமற்ற தேர்தல் முறைகள் மூலம் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)