Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரலாற்றுச் சிறப்பு மிக்க தந்தாமலை முருகன் கோவில் மஹோற்சவம் இன்று ஆரம்பம்!

In இலங்கை
Updated: 17:42 GMT, Jul 7, 2018 | Published: 17:42 GMT, Jul 7, 2018 |
0 Comments
1089
This post was written by : Litharsan

வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு, தாந்தாமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தாந்தாமலை முருகன் ஆலயத்தின் கொடியேற்றத்திற்கு முன்பாக கோயில் கொண்டுள்ள மலைப்பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையாருக்கான கொடியேற்றம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இலங்கையிலேயே விசேட வடிவத்துடன் கொண்ட ஆலய மூலஸ்தானத்தில் மூலமூர்த்தியாகவுள்ள முருகப்பெருமானுக்கு பூஜைகள் நடைபெற்று கொடிச்சீலை ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கொடியேற்றத்தில் கொடிச்சீலையுடன் நெற்கதிர்கள் கொடியாக இணைக்கப்பட்டு கொடியேற்றம் நடாத்தப்பட்டமை ஆலயத்தின் பழமையாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் இருபத்தொரு நாட்கள் இரவுத் திருவிழாக்கள் அலங்கார சிறப்பு ஆராதனைகளுடன் நடைபெறவுள்ளது.

ஆலயத்தின் தீர்த்த உற்சவமானது எதிர்வரும் 28 ஆம் திகதி ஆடகசௌந்தியினால் கட்டப்பட்ட தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)