Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் விபத்து: 9 வயது சிறுவன் உயிரிழப்பு, 6 பேர் காயம்

In இலங்கை
Updated: 03:58 GMT, Jul 8, 2018 | Published: 03:58 GMT, Jul 8, 2018 |
0 Comments
1066
This post was written by : sujithra

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் வந்தாறுமூலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து ஏறாவூர் நோக்கி வந்த வேன் ஒன்று இன்று அதிகாலை 3.30 மணியளவில் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைகழகத்திற்கு அருகில் உள்ள மின் கம்பத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் ஏறாவூர் விதானையார் வீதியில் வசிக்கு 9 வயதான றமீஸ் சாபித் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த 6 பேரும் சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வேன் மோதியதில் மின் கம்பம் சரிந்து வீழ்ந்ததினால் மட்டக்களப்பின் சில பகுதிகளில் அதிகாலை மின் தடையும் ஏற்பட்டிருந்தது.

இதேவேளை விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)