Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெயினில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாட்டம்

In ஐரோப்பா
Updated: 06:46 GMT, Jul 8, 2018 | Published: 06:46 GMT, Jul 8, 2018 |
0 Comments
1104
This post was written by : Johnson paiva

ஸ்பெயினின், மட்ரிட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆடல், பாடல் நிறைந்த பெருமையான அணிவகுப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

ஓரினச்சேர்க்கை உரிமை வழங்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அணிவகுப்பு 40 வருடங்களுக்கு பிறகு நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கானோர் அதில் கலந்து கொண்டு தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஓரினச்சேர்க்கையாளர்கள் பொலிஸாரின் தொல்லைகளுக்கு எதிராக 1968 ஜூன் 28 இல் நடத்திய ஸ்டோன்வோல் ரியோட் ஆர்ப்பாட்டத்தின் நினைவுதினம் ஆண்டுதோறும் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாத ஆரம்பத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் கடந்த 40 வருடங்களாக இது மறுக்கப்பட்டிருந்தது.

இவ்வருடம் அனுமதி வழங்கப்பட்டு நடத்தப்பட்ட குறித்த அணிவகுப்பின்போது மத்திய மட்ரிட் வீதிகளில் சனக்கூட்டம் நிறைந்தமையினால் சில மணித்தியாலங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்துப்போனது. மேலும் இந்த அணிவகுப்பில் அமைச்சரவையின் பல மூத்த உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)