Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லிபியாவிலிருந்து ஐரோப்பாவிற்குள் நுழைய காத்திருக்கும் 700,000 அகதிகள்

In ஐரோப்பா
Updated: 11:34 GMT, Jul 8, 2018 | Published: 11:34 GMT, Jul 8, 2018 |
0 Comments
1087
This post was written by : Johnson paiva

லிபியாவிலிருந்து மத்தியதரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைவதற்காக 700,000 பேர் காத்திருப்பதாக இத்தாலி தேசிய குற்றவியல் நிலையம் (NCA) தெரிவித்துள்ளது.

மேலும் இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் வசிக்கும் மக்கள்தொகையினை விட இது அதிகமெனவும் அவர்களுக்கு புதிய வாழ்க்கையினை வழங்குவதற்காக ஐரோப்பா மிகுந்த சிரமங்களுக்கு முகம் கொடுக்கவேண்டி வருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் NCA இயக்குனர் இது தொடர்பாக கூறுகையில், “சட்டத்துக்கு புறம்பான பாதுகாப்பற்ற கடற்பயணத்தினை மேற்கொள்ளவேண்டாம், இவ்வருடம் ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு படகு மூலம் வந்த 300 பேர் நடுக்கடலில் மூழ்கியுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வருபவர்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கொண்டிருந்த முரண்பாடுகளிலிருந்து அண்மையில் பொதுவான ஒரு முடிவுக்கு வந்ததையடுத்து புலம்பெயர்ந்தோரை  ஐரோப்பிய நாடுகளுக்கு பகிர்ந்து அனுப்ப முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)