Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கி ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)

In உலகம்
Updated: 02:37 GMT, Jul 9, 2018 | Published: 02:37 GMT, Jul 9, 2018 |
0 Comments
1093
This post was written by : sujithra

துருக்கியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 10 பயணிகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  முதல் கட்ட தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், காயமடைந்தவர்களில் மேலும் சிலர் தற்போது உயிரிழந்துள்ளதுடன், மேலும், 100இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனவும் துணை பிரதமர் கூறியுள்ளார்.

துருக்கியில் ரயில் தடம்புரண்டதில் 10 பேர் உயிரிழப்பு

துருக்கி நாட்டில் ரயில் ஒன்று தடம் புரண்டதில்  10 பேர் உயிரிழந்துள்ளதோடு, 73 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல்கேரிய எல்லையிலுள்ள கபிகுலே நகரிலிருந்து இஸ்தான்புல்லுக்குப் பயணித்த ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

சுமார் 360 பயணிகளுடன் சென்ற குறித்த ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ரயில் தடம் புரண்டமைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால், சீரற்ற காலநிலை மற்றும் அதனால் ஏற்பட்ட மண்சரிவே இதற்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் கூடுதலானோர் ஹெலிகொப்டரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஆளுநர் மெஹ்மட் செலான் தெரிவித்துள்ளார்.

ரயில் தடம் புரண்டதில் காயமடைந்தவர்களுள் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாக ரஷ்ய செய்திகள் தெரிவித்துள்ளன.

மேலும், சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக, அந்நாட்டு ஜனாதிபதி தயீப் எர்டோகன் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதாக அவரது அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)