Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வழமைக்கு மாறான வெப்பநிலை: பிரான்ஸ் மக்கள் கொண்டாட்டம்

In ஐரோப்பா
Updated: 10:22 GMT, Jul 9, 2018 | Published: 10:22 GMT, Jul 9, 2018 |
0 Comments
1089
This post was written by : sujithra

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கோடைக்காலம் ஆரம்பமாகியிருக்கும் நிலையில் முதல் நாளே அதிகளவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனையடுத்து வெயில் நாளை சிறப்பிக்கும் முகமாக எர்பன் கடற்கரையை நோக்கி  அதிகமான மக்கள் சென்ற வண்ணமுள்ளனர்.

முதல் நாள் வெப்பநிலையானது 31 டிகிரியாக காணப்படுவதுடன், இது வழமையான சராசரி வெப்ப்நிலையை விட 7 டிகிரி செல்சியஸ் அதிகமாக காணப்பட்டது.

அதிகரித்த வெப்பநிலை காரணமாக கடற்கரைகளில் தங்களின் பொழுதை களிக்கும் மக்கள் குடும்பத்தோடு அங்கு சென்று நீர் விளையாட்டுக்கள் மற்றும் படகு சவாரிகள் என்பவற்றில் கலந்துகொண்டு மகிழ்ந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பரிஸில் தற்போது கோடை விடுமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பாடசாலை மாணவர்கள், கல்லூர் மாணவர்கள் என அனைவரும் தங்களின் விடுமுறையினை எர்பன் கடற்கரை மற்றும் நீர்நிலைகளில் கொண்டாடி மகிழ்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)