Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்ஸிட் நெருக்கடி : பொரிஸ் ஜோன்சன் பதவி விலகினார்

In
Updated: 14:59 GMT, Jul 9, 2018 | Published: 14:43 GMT, Jul 9, 2018 |
0 Comments
1142
This post was written by : S.K.Guna

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்  பொரிஸ் ஜோன்சன்  இன்று  பதவி விலகியுள்ளார். பிரெக்ஸிட் நெருக்கடிக்கு மத்தியில் பதவி விலகிய சிரேஷ்ட அமைச்சர்கள் வரிசையில்   இரண்டாவது அமைச்சர் ஆவார்.

ஏற்கனவே பிரெக்ஸிட் அமைச்சர்   டேவிட் டேவிஸ் பதவி விலகிய ஒரு மணி நேரத்திற்குள் பொரிஸ் ஜோன்சன் பதவி விலகியுள்ளார்.

பிரதமர் தெரேசா மே பிரெக்ஸிட் குறித்த தனது புதிய திட்டம் பற்றி தெரிவிப்பதற்கு முன்னதாக பொரிஸ் ஜோன்சன்  பதவி விலகியுள்ளார்.

பொரிஸ் ஜோன்சனின் சேவைக்கு நன்றி தெரிவித்த பிரதமர் அலுவலகம் விரைவில் புதிய வெளிவிவகார அமைச்சர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது.

எனினும்  பொரிஸ் ஜோன்சனின் வெளியேற்றம் நெருக்கடியான சூழ்நிலையில் பிரதமர் தெரேசா மே க்கு மேலும் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)