Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய இளவரசருக்கு ஞானஸ்நானம்

In
Updated: 07:57 GMT, Jul 10, 2018 | Published: 05:49 GMT, Jul 10, 2018 |
0 Comments
1082
This post was written by : Johnson paiva

இளவரசர் லூயிஸ் என பெயரிடப்பட்டுள்ள  பிரித்தானிய இளவரசர் வில்லியம் – கேட் தம்பதியினரின் மூன்றாவது குழந்தைக்கு மத்திய லண்டனின் அரண்மனை வளாகத்தில் உள்ள புனித ஜேம்ஸ் தேவாலயத்தில் ஞானஸ்நானம் அளிக்கும் விழா நடைபெற்றுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க ஜோர்தான் நதி நீரால் இளவரசர் லூயிஸ்-க்கு ஞானஸ்நானம் அளிக்கும் விழாவை கன்டர்பரி நகரின் தலைமை பேராயர் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

இந்த விழாவில் மறைந்த டயானாவின் கணவரும், இளவரசர் வில்லியம்ஸின் தந்தையும், பிரித்தானிய இளவரசருமான சார்ளஸ் தனது மனைவி கமில்லாவுடன் பங்கேற்றார். இளவரசர் ஹரி – மேகன் தம்பதியர் மற்றும் வில்லியம் – கேட் தம்பதியரின் மூத்த மகன் 4 வயதான இளவரசர் ஜோர்ஜ், இளவரசி சார்ளஸ் கேட்டின் பெற்றோர், சகோதர – சகோதரிகள் மற்றும் அரச குடும்பத்து நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மாத்திரமே இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

பொதுவாக, கிறிஸ்தவ குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் அளிக்கும் சடங்கு நடைபெறும்போது, அந்த குழந்தையை கிறிஸ்தவ மதம்சார்ந்த நல்வழியில் வளர்த்து, சுகதுக்கங்களில் பங்கேற்கும் பொறுப்புகளை ஏற்க ‘ஞானத்தாய்’ மற்றும் ‘ஞானத்தந்தை’ ஆகியோரை நியமிப்பதுண்டு.

அவ்வகையில், இன்று ஞானஸ்நானம் பெறும் குட்டி இளவரசர் லூயிஸ்-க்கு ‘ஞானப் பெற்றோர்’ ஆக 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவிற்கு வருகைதரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வின்ட்ஸர் கேஸ்ட்டில் அரண்மனையில் ராணி எலிசபத் சந்திக்க வேண்டியுள்ளதால், இந்த ஞானஸ்நான விழாவில் ராணி எலிசபத் மற்றும் அவரது கணவர் பிலிப் ஆகியோர் பங்கேற்கவில்லையென அரண்மனையின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விழாவின் போது வில்லியம்ஸ் – கேட் தம்பதியர் தேநீர் விருந்து ஒன்றினை வழங்கினர். இந்த விருந்தில் வில்லியம்ஸ் – கேட் திருமணத்தின்போது தயாரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் சிறப்பு கேக் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர் மட்டும் அழைக்கப்பட்ட குறித்த விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இளவரசரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பதாதைகள் ஏந்தியவாறு பொதுமக்கள் ஆலயத்தின் வெளியே திறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)