Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கொரியா மீண்டும் தனி அணிவகுப்பு

In
Updated: 05:51 GMT, Jul 10, 2018 | Published: 05:51 GMT, Jul 10, 2018 |
0 Comments
1076
This post was written by : Farwin Hanaa

தென்கொரியா தனது வருடாந்த அரச அணிவகுப்பினை, தனது நாட்டின் பாரம்பரியத்திற்கேற்ப இம்முறை தனித்து நடத்த தீர்மானித்துள்ளது.

இதுவரை காலமும் அமெரிக்காவுடன் இணைந்து தனது வருடாந்த போர் அணிவகுப்பை நடத்தி வந்த நிலையில், இனிவரும் காலத்தில் தனித்து நடத்துவதென இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னிற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்திப்பு கடந்த ஜூன் மாதம் 12ஆம் திகதி சிங்கப்பூரில் இடம்பெற்றதையடுத்து, அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு போர் பயிற்சி நடவடிக்கையை இடைநிறுத்துவதாக இரு நாடுகளும் குறிப்பிட்டிருந்தன.

இந்நிலையில், இனிவரும் காலத்தில் போர் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு மட்டுமன்றி இயற்கை அனர்த்தங்களின் போது பாதுகாப்புச் செயன்முறைகளில் ஈடுபடுவது போன்ற செயற்பாடுகளையும் கருத்திற்கொண்டே தமது நாட்டின் வருடாந்த பயற்சி அணிவகுப்பு அமையுமென தென்கொரிய உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கிம் பூ கியும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்காவின் ஆலோசனைகளும் உள்வாங்கப்படுமென தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தென்கொரிய போர் பயிற்சி நடவடிக்கையானது வழமையாக ஓகஸ்ட் மாதமே நடைபெறும். இம்முறை தனித்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இப்பயிற்சி நடவடிக்கையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)