Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தஷ்வந்திற்கு தூக்கு தண்டனையை உறுதி

In இந்தியா
Updated: 15:21 GMT, Jul 10, 2018 | Published: 08:57 GMT, Jul 10, 2018 |
0 Comments
1083
This post was written by : Jeyachandran Vithushan

சென்னையில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளி தஷ்வந்திற்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், தஷ்வந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி , கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், தொழில்நுட்ப பொறியாளர் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்ன,ர் அவர் பிணையில் வெளிவந்து தனது தாயை கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பிச் சென்றார். பின்னர், விசேட பொலிஸார் மும்பை சென்று அவரை பிடித்து புழல் சிறையில் அடைத்தனர்.

குறித்த வழக்கில் அவருக்கு கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியதுடன் அவருக்கு 31 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், குழந்தைகள் பாலியல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 15 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)