Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலம் தமிழகம்: அமித்ஷா

In இந்தியா
Updated: 09:59 GMT, Jul 10, 2018 | Published: 09:59 GMT, Jul 10, 2018 |
0 Comments
1043
This post was written by : Kemasiya

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் விளங்குகின்றமை மனவேதனை அளிக்கின்றதென, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு நேற்று (திங்கட்கிழமை) விஜயம் செய்திருந்த அமித்ஷா, கட்சி தொண்டர்களுடன் பல்வேறு கூட்டங்களை நடத்தியிருந்தார்.

இவ்வாறு கட்சித் தொண்டர்களுடனான சந்திப்பை தொடர்ந்து, ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கூறியிருந்த அமித்ஷா,

“தமிழகத்தை ஊழலிலிருந்து மீட்டெடுக்க பா.ஜ.க. ஊறுதி கொள்ள வேண்டும். தேர்தல் காலங்களில் ஊழல் வாக்குக்காக பணம் என்ற நிலைமையிலிருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும்.

கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் முன்னெடுக்காதளவிற்கு பிரதமர் மோடியின் திட்டங்கள் அமைந்துள்ளன.

அடுத்த ஆண்டு (2019) இல், தமிழகத்திலும் வலிமை மிக்க கட்சியாக பா.ஜ.க. திகழும்” எனக் கூறினார்.

அத்துடன் தமிழகத்தில் பா.ஜ.க எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கிய அமித்ஷா, ‘எந்த கட்சி ஊழலை ஒழிக்க முன்நின்று செயற்படுகிறதோ அந்த கட்சியுடன் தாக் கூட்டணி அமையப்பெறும்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)