Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்ராறியோ ஏரியை கடக்க முற்பட்ட 16 வயது யுவதிக்கு தோள்பட்டையில் காயம்!

In கனடா
Updated: 11:03 GMT, Jul 10, 2018 | Published: 11:03 GMT, Jul 10, 2018 |
0 Comments
1033
This post was written by : Jeyachandran Vithushan

ஒன்ராறியோ ஏரியை முழுமையாக நீந்தி கடக்க முற்பட்ட யுவதி ஒருவர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டுள்ளார்.

ஒட்டாவா பகுதியை சேர்ந்த  16 வயதுடைய மாயா என்ற குறித்த இளம் பெண் 88 கிலோமீற்றர் நீளமுடைய ஏரியை கடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இருப்பினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது தோள்பட்டையில் காயம் ஏற்படவே அவர் ஏரியில் இருந்து மீட்கப்பட்டார்.

குறித்த யுவதி 20 மணி நேரங்களில் 35 கிலோமீற்றர் தூரத்தை கடந்திருந்ததாகவும் இருப்பினும் 4 மணி நேரத்திற்கு முன்பே அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்த அவரது தந்தை அவர் நீரில் இருந்து வெளியில் வர முயற்சிக்கவில்லை என கூறினார்.

இருப்பினும் அவரது பயிற்றுவிப்பாளரும் தந்தையும், இதனை அறிந்து நீரில் இருந்து அவரை மீட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு Niagara ஏரியை 24 மணி நேரத்தில் கடக்கும் முயற்சியில் 300 மீட்டர் தூரத்தை அடைந்த போது, அங்கு மின்னல் தாக்கம் அதிகமாக இருந்தமை காரணமாக, அவர் நீரில் இருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)