Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிஃபா உலகக்கிண்ணம்: இறுதிப் போட்டியில் பிரான்ஸ்!

In உதைப்பந்தாட்டம்
Updated: 03:41 GMT, Jul 11, 2018 | Published: 03:41 GMT, Jul 11, 2018 |
0 Comments
1108
This post was written by : Varshini

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியில், பெல்ஜியத்தை வெற்றிகொண்ட பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் இறுதி போட்டிக்கான இடத்தை ஒதுக்கிக்கொண்டது.

இப்போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் இரு நாட்டு வீரர்களின் முயற்சிகளையும், இரு நாட்டு கோல் காப்பாளர்களும் தடுத்து நிறுத்தினர். இதனால் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதனையும் அடிக்கவில்லை.

இதனையடுத்து, தீர்மானம்மிக்க இரண்டாவது பாதி நேர ஆட்டத்தின் 51ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல், கோல் ஒன்றை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதுவே, போட்டியில் பெறப்பட்ட முதலும் இறுதி கோலாகவும் மாறிய நிலையில் பிரான்ஸ் அணி, பெல்ஜியத்தை ஒன்றுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் முதலில் காலடி எடுத்து வைத்துள்ளது. பிரான்ஸ் அணியின் இந்த வெற்றியை அந்த நாட்டு காற்பந்தாட்ட ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதேவேளை பெல்ஜியம் நாட்டு காற்பந்து ரசிகர்கள் ஆரம்பத்தில் தமது அணி வெளிப்படுத்திய ஆற்றலை வரவேற்றிருந்தாலும் இறுதியில், தோல்வியடைந்ததை கவலைதோய்ந்த முகத்தோடு பார்வையிட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)