Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓய்வுபெறுகிறார் ரங்கன ஹேரத்!

In கிாிக்கட்
Updated: 06:16 GMT, Jul 11, 2018 | Published: 06:16 GMT, Jul 11, 2018 |
0 Comments
1258
This post was written by : Varshini

கிரிக்கெட் உலகில் எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத், தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ள தீர்மானித்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரங்கன ஹேரத்தின் இந்த ஓய்வு முடிவு, இரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அத்தோடு, ரங்கன ஹேரத்தை கொண்டே எதிரணி வீரர்களுக்கு பயம் காட்டும் இலங்கை அணிக்கு, அவரது இழப்பு பேரிழப்பாகவும் பார்க்கப்படுகின்றது.

சமீபகாலமாக உபாதைக் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வந்த அவர், தனது வயது மற்றும் உடற் தகுதியை கருத்திற் கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

40 வயதான ரங்கன ஹேரத்,  தனது ஒய்வு குறித்து கூறிய கருத்துக்கள் இவை…

“தென்னாபிரிக்கா அணிக்கெதிரான தொடர் முடிவடைந்து மூன்று மாதங்களின் பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் நடைபெறவுள்ளது. அதுவரையே நான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளேன்.

ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஓய்வெடுக்கவேண்டிய நேரம் வரும். எனக்கு அவ்வாறானதொரு நேரம் வந்துவிட்டது என நான் கருதுகின்றேன்.

என்னால் முடிந்தளவிற்கு விளையாட முடிந்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். தென்னாபிரிக்க தொடரின் பின்னர், அணித்தலைவர் மற்றும் பயிற்றுவிப்பாளருடன் கலந்துரையாடி எனது எதிர்காலம் குறித்து முடிவெடுப்பேன்.

பெரும்பாலும், இவ்வருட இறுதியில் இடம்பெறும் இங்கிலாந்திற்கு எதிரான தொடர் எனது இறுதித் தொடராக அமையலாம்” எனக் கூறினார்.

கடந்த 1999ஆம் ஆண்டு அவுஸ்ரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஹேரத், கிரிக்கெட் உலகில் நிலைநாட்டிய சாதனைகள் ஏராளம்.

மூன்றுவகை கிரிக்கெட் போட்டிகளிலும், அதிசிறந்த திறமையினை வெளிக்காட்டிய ஹேரத்துக்கு இன்றும் உலகளவில்  ரசிகர் பட்டாளம் நிறைந்து காணப்படுகின்றது.

ரங்கன ஹேரத், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடரின் போது, ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார்.

இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.

டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் பல முறை முதலிடத்தை எட்டிய ரங்கன ஹேரத், இலங்கை டெஸ்ட் அணியின் அணித்தலைவராகவும் அணியை வழிநடத்தியுள்ளார்.

ரங்கன ஹேரத் நிலைநாட்டிய அசைக்க முடியாத சாதனைகளில், அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய இடது கை பந்துவீச்சாளர், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளோடு 1500 ஓட்டங்களையும் கடந்த முதல் இலங்கை வீரர், இந்திய மண்ணில் துடுப்பாட்ட வரிசையில் 8ஆவது, அல்லது அதற்கடுத்ததாக களமிறங்கி அதிக வயதில் அரைச்சதம் அடித்த முதல் வீரர், அனைத்து டெஸ்ட் அந்தஸ்தினை கொண்ட நாடுகளுக்கும் எதிராக 5 விக்கெட்களை கைப்பற்றிய வீரர் போன்றவை முக்கியமானவை.

ரங்கன ஹேரத், இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 418 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 33 முறை ஐந்து விக்கெட்டுகளையும், 9 முறை பத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இதேபோல, 71 ஒருநாள் போட்டிகளில் 74 விக்கெட்டுகளையும், 17 ரி-ருவென்ரி போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)