Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுதந்திர தினத்திற்குள் நல்ல தீர்ப்பு கிடைக்கும்: தினகரன் நம்பிக்கை

In இந்தியா
Updated: 09:37 GMT, Jul 11, 2018 | Published: 07:08 GMT, Jul 11, 2018 |
0 Comments
1078
This post was written by : Kemasiya

தினகரன் ஆதரவு பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், சுதந்திர தினத்திற்கு முன்பாக சிறந்த தீர்ப்பு கிடைக்குமென, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்படி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை, எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. எனவே குறித்த வழக்கு விசாரணையின் போது தீர்ப்பு வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படும் நிலையில், சுதந்திர தினத்திற்கு முன்னர் சிறந்த தீர்ப்பு வருமென எதிர்பார்ப்பதாக தினகரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் மொழி நீட் தேர்வில்  தவறாக கேட்கப்பட்ட வினாக்களுக்காக, மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை தான் வரவேற்பதாகவும் தினகரன் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)