Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீட்புப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார் தாய் பிரதமர்!

In உலகம்
Updated: 09:04 GMT, Jul 11, 2018 | Published: 09:04 GMT, Jul 11, 2018 |
0 Comments
1064
This post was written by : Farwin Hanaa

தாய்லாந்து குகைக்குள் 17 நாட்களாக சிக்கியிருந்த 12 மாணவர்களையும் அவர்களின் பயிற்றுவிப்பாளரையும் பாதுகாப்பாக மீட்ட மீட்புக்குழுவிற்கு, அந்நாட்டு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

குகைக்குள் சிக்கியிருந்தவர்கள், கடந்த 3 நாட்களாக தொடர்ந்த கடும் போராட்டத்தின் பின்னர் வெளியில் அழைத்து வரப்பட்டனர். மீட்புப் பணியில் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா மீட்புப் படையினருக்கு நன்றி தெரிவித்தார்.

மீட்கப்பட்ட 13 பேரும் சராசரியாக 2 கிலோ எடையை இழந்துள்ளாா்கள். அது தவிர அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் எந்தவித குறையுமில்லையென சிரேஷ்ட சுகாதார உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

குகையில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து தாய்லாந்து மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கால்பந்து பயிற்சியை நிறைவுசெய்துவிட்டு கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி வீடு திரும்பும் வழியில் 12 மாணவர்களும் அவர்களது பயிற்சியாளர்களும் குகைக்குள் சிக்கினர். 17 நாட்களாக தொடர்ந்த தேடுதல் நடவடிக்கையின் போது சுழியோடி ஒருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)