Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்

In கிாிக்கட்
Updated: 10:22 GMT, Jul 11, 2018 | Published: 10:22 GMT, Jul 11, 2018 |
0 Comments
1124
This post was written by : Varshini

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

இதற்கென இந்திய கிரிக்கட் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இப்போட்டி நாளை Nottinghamஇல் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து அணி அண்மையில் அவுஸ்ரேலிய அணியை 5-0 என்ற கணக்கில் வெற்றிகொண்டது. இதனால் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இந்தியாவுக்கு சவாலாக இருக்குமென கூறப்படுகின்றது.

என்றபோதிலும் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அங்கு சாதிக்கும் என்றும் நம்பப்படுகின்றது.

இறுதியாக 2014ஆம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.

இதுவரையில் இரு அணிகளும், 96 தடவைகள் மோதியுள்ளன. இதில் 52 போட்டிகளில் இந்தியாவும் 39 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு போட்டிகள் சமநிலையில் நிறைவடைய, 3 போட்டிகள் முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டன.

இங்கிலாந்திற்கு சென்றுள்ள இந்திய அணி அங்கு 3 ரி-ருவென்ரி போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகள் என்ற நீண்ட தொடரில் விளையாடுகின்றது.

நடைபெற்று முடிந்த ரி-ருவென்ரி தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)