Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சி மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: அரசாங்க அதிபர்

In
Updated: 11:17 GMT, Jul 11, 2018 | Published: 11:17 GMT, Jul 11, 2018 |
0 Comments
1032
This post was written by : Vithushagan

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற வீட்டுத் தேவைகள் எதிர்காலத்தில் விரைவாக பூர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்தில் மாற்றீட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்ட வீட்டினை உரிய பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் ”மாற்றீட்டு தொழில் நுட்பத்தினை வீடுகள் அமைக்கும் செயற்பாடுகள் முப்பது வருடகாலமாக இருந்தாலும் எமது மாவட்டத்தைப்பொறுத்தவரையில் இது ஒது புதியதாகவே எங்களுக்கு காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் ஏறத்தாழ 889 வீடுகள் அனுமதிக்கப்பட்டிருந்தன.

எமது மாவட்டத்தைப்பொறுத்த வரையில் வீட்டுத்தேவைகள் மிக மிக அதிகம் சுமார் பதினான்காயிரத்திற்கும் அதிகமான வீடுகள் தேவையாகவுள்ளது. குறித்த வீடு மனித வாழ்வுக்கு மிகவும் ஏற்றதாக காணப்படுகின்றது.

இதனை அமைப்பதில் பல்வேறு காலதாமதங்கள் காணப்பட்டன அதாவது இதற்கான உள்ளீடுகளை பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் காணப்பட்டன. இப்போது இத்தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டத்தில்பதினான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீட்டுத்;தேவைகளுடன் காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான கட்டுமானப்பணிகளை விரைவு படுத்த வேண்டியுள்ளது,

இவ்வாறு செயற்படுவதன் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற வீட்டுத்தேவைகள் எதிர்காலத்தில் விரைவாக பூர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கையுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)