Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா!

In இலங்கை
Updated: 12:10 GMT, Jul 11, 2018 | Published: 12:10 GMT, Jul 11, 2018 |
0 Comments
1820
This post was written by : Vithushagan

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வானது நேற்று (செவ்வாய்க்கிழமை) கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தலைமையில் கல்லூரியின் சிசிலியா மேரிஅரங்கில் நடைபெற்றது.

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் கல்வி கற்று முதன்முதலாக பல்கலைக்கழகம் சென்று வைத்தியராகவும், பொறியியலாளராகவும், சட்டவல்லுனர்களாகவும், தெரிவானவர்களையும், ஒலிம்பியா போட்டியில் சர்வதேச ரீதியாக வெற்றியீட்டிய மாணவர், மற்றும் வைத்தியத்துரையில் தேசிய ரீதியில் மூன்றாமிடத்தினை பெற்ற மாணவர் உட்பட 2017ஆம் ஆண்டு சகல துறைகளிலும் சிறந்து விளங்கிய மாணவர்களையும் சிறப்பான முறையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு கல்லூரியில் ஏனைய மாவட்டமட்டம், மாகாணமட்டம், தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களையும் பாராட்டி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு அம்பாறை மாறைமாவட்டத்தின் ஆயர் யோசப் பொன்னையா பிரதம அதிதியாகவும், மற்றும் ஏனைய அதிதிகளாக மாகாண சுப்பீரியர் அருட்சகோதரர் கிருஸ்ரி குரூஸ், கல்முனை வலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், கல்முனை தமிழ்ப்பிரிவின் பிரதேச செயலாளர் கே.லவநாதன், கோட்டக்கல்வி அதிகாரி திருமதி ஆர்.திரவியராஜா மற்றும் இக்கல்லூரியில் கல்வி கற்று முதல் நிலையில் தொழில் புரிந்து வரும் பழைய மாணவர்கள், முன்னால் கல்லூரி முதல்வர் ஸ் ரீபன் மத்தியு, அயல் பாடசாலைகளின் அதிபர்கள் அருட்சகோதரிகள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)