Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாமரை மொட்டுச் சின்னத்தில் புதிய கூட்டணி!

In இலங்கை
Updated: 11:55 GMT, Jul 11, 2018 | Published: 11:55 GMT, Jul 11, 2018 |
0 Comments
1049
This post was written by : Risha

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியில் உள்ளக் கட்சிகள் அனைத்தும் இணைந்த, ஒருங்கிணைந்த பொதுஜன பெரமுன எனும் புதியக் கூட்டணி வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

தாமரைமொட்டுச் சின்னத்திலான இந்தக் புதிய கூட்டணி தொடர்பில் வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பொரளை, என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற எமது கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பல முக்கியமான தீர்மானங்கள் எட்டப்பட்டன.

இனிவரும் காலங்களில் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் இதன்போது, தீர்மானிக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறிய மூன்று வருடங்களில் எமக்கான வரப்பிரசாதங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பில் நாம் பேச்சுக்களை நடத்தியும் இதுவரை எந்தவொரு உரிமையும் எமக்கு கிடைக்கவில்லை.

இதனால், எமது கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து புதியக் கூட்டணியின் கீழ் செயற்படத் தீர்மானித்துள்ளோம்;. தாமரை மொட்டுச் சின்னத்திலான ஒருங்கிணைந்த பொதுஜன பெரமுன எனும் இந்தக் கூட்டணி தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

ஒருங்கிணைந்த எதிரணியில் உள்ள இளைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அரசாங்கத்துக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவும் இங்கு தீர்மானித்துள்ளோம்.

2015 பொதுத் தேர்தல் நடைபெற்று மூன்று வருட நிறைவை முன்னிட்டு ஒகஸ்ட் 17ஆம் திகதியன்றே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பும் வெகுவிரைவிலேயே வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)