Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பந்தன் மீது குற்றசாட்டை முன்வைத்துள்ள நாமல் ராஜபக்ஷ!

In இலங்கை
Updated: 15:52 GMT, Jul 11, 2018 | Published: 13:29 GMT, Jul 11, 2018 |
0 Comments
1181
This post was written by : Jeyachandran Vithushan

தமிழ் மக்களை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஏமாற்றி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசிய கூட்டமைப்பு, எதிர்க்கட்சி எனும் பெயரில் அரசின் பங்காளி கட்சியாகவே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சியாக இருந்து வடக்கு மக்களுக்கோ தெற்கு மக்களுக்கோ எதனையும் செய்யவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுத் தருமாறு கோரிய போது, தான் அரசாங்கத்திடம் வேலை வாய்ப்பு கோர மாட்டேன். அரசியல் தீர்வையே கோருவேன் என பதிலளித்துள்ளார்.

ஆனால் இதுவரையில் தமிழ் மக்களுக்கு அவர் வேலை வாய்ப்புகளையோ, அரசியல் தீர்வையோ பெற்றுக்கொடுக்கவில்லை. தொடர்ந்து தமிழ் மக்களை மாத்திரமன்றி நாட்டில் உள்ள அனைத்து இன, மத மக்களையும் ஏமாற்றி வருகின்றார்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)