Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புலிகளின் ஆயுதங்களை தேடும் நடவடிக்கை மட்டக்களப்பிலும் முன்னெடுப்பு!

In இலங்கை
Updated: 15:49 GMT, Jul 11, 2018 | Published: 13:51 GMT, Jul 11, 2018 |
0 Comments
1074
This post was written by : Jeyachandran Vithushan

மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் முகாமில் ஆயுதங்களை தேடி இன்று (புதன்கிழமை) 2ஆவது நாளாக நீதிபதி முன்னிலையில் நிலத்தை தோண்டும் நடவடிக்கை நடைபெற்றது.

கடந்த வாரம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள காந்திபுரம் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்றபோது புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

அதனையடுத்து அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களையும் மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த பகுதியில் முன்னர் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்ததாக தெரியவந்தது.

இந்நிலையில், அப்பகுதியில் ஆயுதம் இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்ட பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் நிலத்தை தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். எனினும், இதுவரை எவ்வித ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)