Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதன்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குரேஷியா

In உதைப்பந்தாட்டம்
Updated: 03:02 GMT, Jul 12, 2018 | Published: 03:02 GMT, Jul 12, 2018 |
0 Comments
1153
This post was written by : Litharsan

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண காற்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு குரேஷிய அணி முன்னேறியுள்ளது.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் குரேஷிய அணிகள் மோதின. அதில் குரேஷிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

போட்டி ஆரம்பமாகிய 5 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் (Kieran Tripier) ஃப்ரீ கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி அபாரமாக கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால், முதல் பாதி ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலைப் பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் குரேஷிய வீரர்கள் கோல் அடிக்க கடுமையாக போராடினார்கள். போட்டியின் 68 ஆவது நிமிடத்தில் குரேஷிய வீரர் இவான் பெர்சிக் (ivan Prrisic) கோல் ஒன்றை அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலையடைந்தன.

அதன் பின்னர் இரு அணியினராலும் கோல்கள் எதனையும் போட முடியாத நிலையில், போட்டி 1-1 என சமநிலையில் நிறைவடைந்தது. தொடர்ந்து வழங்கப்பட்ட 15 நிமிட முதலாவது மேலதிக நேரத்திலும் கோல்கள் போடப்படாமையினால், இரண்டாவது மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

இதன்போது, 109 ஆவது நிமிடத்தில், குரோஷியா வீரர் மாரியோ மாண்ட்சிக் Mario Mandzukic கோல் ஒன்றை அடிக்க அந்த அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

உலகக்கிண்ண வரலாற்றில் குரேஷிய அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை குரேஷிய வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். மறுபுறம் தோல்வி கொடுத்த வலியோடு இறுதிப் போட்டிக் கனவு கலைந்த இங்கிலாந்து இரசிகர்கள் வேதனையோடு தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இறுதிப் போட்டியில் குரேஷிய அணி, பிரான்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)