Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பையில் கடும் மழை: நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிறார் கல்வியமைச்சர்!

In இந்தியா
Updated: 03:27 GMT, Jul 12, 2018 | Published: 03:27 GMT, Jul 12, 2018 |
0 Comments
1091
This post was written by : Kemasiya

மும்பையில் கொட்டித் தீர்க்கும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் செயற்பட்டு வருவதாக, மகராஷ்டிரா மாநில கல்வியமைச்சர் (Vinod Tawde) வினோத் தவாட் கூறியுள்ளார்.

மும்பையில் பெய்துவரும் கடும் மழையினால் அம்மாநிலமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) பேரிடர் முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அமைச்சர்  மேற்படி கூறினார்.

குறித்த கூட்டத் தொடரின் போது, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பது மற்றும் அவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவது போன்ற விடயங்கள் தொடர்பிலும் மழையின் பின்னர் அம்மக்கள் தமது இயல்புவாழ்வை கொண்டுசெல்ல என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

மும்பை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், வெள்ளத்தின் பாதிப்பும் அதிகமாகவுள்ளது.

கடந்த நாட்களில் கொட்டித் தீர்த்த மழையின் அளவு 864.5 மி.மீ என்றும், குறித்த மழை எதிர்வரும் சனிக்கிழமை வரை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை காரணமான தொலைத் தொடர்புகள், மின்சாரம் ஆகியன துண்டிக்கப்பட்டுள்ளதோடு ரயில், விமானம், பேருந்து உள்ளிட்ட அனைத்து வழிப் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தொழில் நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு, வியாபாரிகளும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய வர்த்தக நகரமாக திகழும் மும்பையின் பொருளாதாரம், மழை காரணமாக ஒரே மாதத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது.

ஆண்டுதோறும் மழையின் தாக்கம் மும்பை மக்களை பாதிக்கின்றமையினால், நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாகும்.

இதேவேளை, கடந்த 2005ஆம் ஆண்டு இதே போன்றதொரு மழை மற்றும் வெள்ளம், புயல் ஆகியவற்றின் தாக்கத்தால், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)