Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜேர்மனி தவறிவிட்டது! – டொனால்ட் ட்ரம்ப்

In உலகம்
Updated: 03:09 GMT, Jul 12, 2018 | Published: 03:09 GMT, Jul 12, 2018 |
0 Comments
1121
This post was written by : Varshini

ரஷ்யாவின் சமையல் எரிவாயு குழாய் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் ஜேர்மனி, தமது நாட்டு பாதுகாப்புக்கு அதிக நிதியொதுக்கீட்டை மேற்கொள்ள தவறிவிட்டதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரஸல்ஸில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொண்டுள்ள ட்ரம்ப், நெட்டோ பொதுச்செயலாளர் ஜீன் ஸ்டோலென்பெர்க்குடன் இணைந்து நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போதே ஜேர்மன் மீது பகிரங்கமாக இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா அதிகளவு நிதியொதுக்கீட்டை மேற்கொள்கின்ற நிலையில், ஐரோப்பிய பொருளாதாரத்தில் பாரிய பங்கினை வகிக்கும் ஜேர்மனியானது மொஸ்கோவின் எரிவாயு குழாய் திட்டத்திற்கு ஆதரவளிப்பது பொருத்தமற்றதென ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்.

ரஷ்யாவின் ஆதிக்கத்திற்குள்ளேயே ஜேர்மனி காணப்படுகின்றதென்றும், அதனால் 60 தொடக்கம் 70 வீதம் வரையான எரிவாயு கொள்வனவை ரஷ்யாவிடமிருந்தே பெறுவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார். இது நேட்டோ நாடுகளுக்கு பொருத்தமற்றதென்றும், இதுகுறித்து ஜேர்மனியுடன் கலந்துரையாடுவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நோர்ட் ஸ்ட்ரீம் 2 என அழைக்கப்படும் ரஷ்ய எரிவாயு திட்டத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டுவரும் 11 பில்லியன் டொலர் பெறுமதியான திட்டத்திற்கு, ஜேர்மன் அரசியல் ரீதியான ஆதரவை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இத்திட்டம் ஒரு தனியார் வர்த்தக முயற்சி என்றும், இதற்கு ஜேர்மனிய வரிசெலுத்துவோர் நிதியளிக்கவில்லை என்றும் ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)