Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதுகாப்பு செலவீனத்தை இரட்டிப்பாக்க நேட்டோ நாடுகள் இணக்கம்!

In
Updated: 13:11 GMT, Jul 12, 2018 | Published: 03:15 GMT, Jul 12, 2018 |
0 Comments
1077
This post was written by : Varshini

பாதுகாப்புக்காக ஒதுக்கும் நிதியை இரட்டிப்பாக்குவதற்கு நேட்டோ உறுப்பு நாடுகள் சம்மதித்துள்ளதாக அதன் செயலாளர் நாயகம் ஜீன் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வரிசெலுத்துவோர் மீதான சுமையை குறைப்பதற்கு, ஏனைய உறுப்பு நாடுகளும் பங்களிப்பு செலுத்த வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். அதன் பிரகாரம் நேட்டோ உறுப்பு நாடுகள் அதனை பின்பற்ற ஆரம்பித்துள்ளதென நேட்டோ செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

ட்ரம்புடனான சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களை நேற்று (புதன்கிழமை) சந்தித்த அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

ட்ரம்பின் கருத்தை ஏற்றுக்கொண்ட நேட்டோ உறுப்பு நாடுகள், பாதுகாப்பு செலவீனங்களை பகிர்ந்துகொள்வதன் அவசியத்தை உணர்ந்துகொண்டதாக இதன்போது நேட்டோ செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

நேட்டோ நாடுகளுக்கிடையில் கடந்த 2014ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், 2024ஆம் ஆண்டுவரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 வீதத்தை பாதுகாப்பு செலவீனத்திற்கு ஒதுக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், 28 உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு வீதமான நாடுகளே அந்த இயலுமையை கொண்டுள்ளதென நேட்டோ இராஜதந்திரிகள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு, அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.57 வீதத்தை பாதுபாப்பு செலவீனத்திற்கென ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)