Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ் தேசிய தினத்திற்கான ஒத்திகை ஆரம்பம்

In ஐரோப்பா
Updated: 03:22 GMT, Jul 12, 2018 | Published: 03:22 GMT, Jul 12, 2018 |
0 Comments
1068
This post was written by : Varshini

பிரான்ஸ் தேசிய தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் Bastille Day எனப்படும் வருடாந்த அணிவகுப்பு மரியாதைக்கான ஒத்திகை நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

பிரான்ஸ் தேசிய தினம் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தலைநகர் பரிஸில் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. அந்தவகையில் இம்முறை இந்நிகழ்விற்கென ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அழைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இரு நாடுகளினதும் துருப்புக்கள், பிரான்ஸ் துரப்புக்களுடன் இணைந்து நேற்று தமது ஒத்திகை நடவடிக்கையை ஆரம்பித்தன.

நாளை மறுதினம் இடம்பெறவுள்ள தேசிய நிகழ்வில் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹெசென் லூங் கலந்துகொள்ளவுள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஸின்ஸோ அபேயும் இந்நிகழ்விற்கு அதிதியாக அழைக்கப்பட்டிருந்த போதும், அந்நாடு எதிர்கொண்டுள்ள பாரிய வெள்ள அனர்த்தத்தை கருத்திற்கொண்டு அவரது விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)