Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: புதிய பரிமாணத்தில் விசாரணை!

In இந்தியா
Updated: 06:47 GMT, Jul 12, 2018 | Published: 03:55 GMT, Jul 12, 2018 |
0 Comments
1078
This post was written by : Kemasiya

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது பொலிஸார் அத்துமீறி தாக்குதல் நடத்தியமை தொடர்பான வழக்கை விசாரிக்க, மனித உரிமை ஆணையத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்வந்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் நேரடி ஆய்வை மேற்கொண்ட தேசிய மனித உரிமை ஆணைக்குழு, நேற்று (புதன்கிழமை) தமது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.

அறிக்கையின் பெரும்பாலான கருத்துக்கள், துப்பாக்கி சூட்டு விடயத்தில்  மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்ற விடயத்தையே சுட்டிக்காட்டியுள்ளன. எனவே இவ்வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்க, மனித உரிமை ஆணையகம் முன்வந்துள்ளது.

குறித்த விசாரணை இம்மாதம் இறுதிக்குள் ஆரம்பிக்கப்படலாம் என நம்பப்படும் அதேவேளை, இது முக்கியமானதொரு விசாரணையாக நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தின் 100ஆவது நாளான கடந்த மே மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற பாரிய போராட்டத்தில், பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க முற்பட்டபோது பொலிஸாருக்கும், பொதுமக்களுக்குமிடையே வன்முறை வெடித்தது. இதன்போது அத்துமீறி பொலிஸார் முன்னெடுத்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)