Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லியில் ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல் முறியடிப்பு: ராணுவ அதிகாரி

In இந்தியா
Updated: 04:30 GMT, Jul 12, 2018 | Published: 04:30 GMT, Jul 12, 2018 |
0 Comments
1121
This post was written by : Kemasiya

டெல்லியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தீட்டிய சதித்திட்டம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக, இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் நேற்று (புதன்கிழமை) கருத்துரைத்த அவர், தீவிரவாத சதித்திடங்கள் தொடர்பில் பேசுகையில் குறித்த முக்கிய விடயத்தை முன்வைத்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“ஆப்கானிஸ்தான், டுபாய், இந்தியா ஆகிய நாடுகளில் ஓராண்டுக்கும் மேலாக நடத்திய கண்காணிப்புக்கு பின்னர், இந்த சதித்திட்டம் கண்டறியப்பட்டது. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 12 பயங்கரவாதிகள், உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

அவ்வாறு இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். பயங்கரவாதி, டெல்லி விமான நிலையம், வசந்த் கஞ்ச் வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களை தகர்க்க ஒத்திகை பார்த்த விடயம் கண்டறியப்பட்டது.

அதை தொடர்ந்து குறித்த தீவிரவாதியை நீண்ட காலமாக கண்காணித்து வந்த பாதுகாப்பு படையினர், 2017 ஆம் ஆண்டு இறுதியில் கைது செய்தனர். பிறகு அவனை தங்களது உளவாளியாக மாற்றி, ஐ.எஸ். இயக்கத்தின் சதித்திட்டத்தை முறியடித்தனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட குறித்த தீவிரவாதி, அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். தலீபான்களுக்கு எதிரான போரில், அமெரிக்க ராணுவத்துக்கு அவர் உதவி வருவதாக அறியமுடிகிறது” என குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)