Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீர்மானம் மிக்க பேச்சுவார்த்தை: இஸ்ரேல் பிரதமர் மொஸ்கோ விஜயம்

In உலகம்
Updated: 04:24 GMT, Jul 12, 2018 | Published: 04:24 GMT, Jul 12, 2018 |
0 Comments
1079
This post was written by : Varshini

சிரிய விவகாரம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு மொஸ்கோ சென்றுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) அவர் மொஸ்கோ நோக்கி புறப்பட்டதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

புட்டினுடனான சந்திப்பின்போது, ஈரான் மற்றும் சிரியாவில் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களை இஸ்ரேல் இனியும் பொருத்துக்கொள்ளாதென நெத்தன்யாகு உறுதியாக தெரிவிப்பாரென இஸ்ரேல் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், புட்டினுடனான சந்திப்பின்போது சிரியா, ஈரான் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும், ரஷ்ய ஜனாதிபதியுடன் தொடரும் நட்பானது இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியமானதென்றும் மொஸ்கோவிற்கு புறப்படுவதற்கு முன்னர் நெத்தன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

சிரிய உள்நாட்டு போரில் இஸ்ரேல் நடுநிலை வகித்தாலும், ஈரானின் ஹிஸ்புல்லா பிரிவினைவாதிகளின் ஆயுத பரிமாற்றத்தை முறியடிக்கும் வகையில் இஸ்ரேல் விமானத்தாக்குதல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)