Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காவிரியில் வெள்ளம்: தமிழகத்திற்கு தண்ணீர்

In இந்தியா
Updated: 04:36 GMT, Jul 12, 2018 | Published: 04:36 GMT, Jul 12, 2018 |
0 Comments
1083
This post was written by : Kemasiya

கர்நாடகாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையை அடுத்து, காவிரி நதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளமையால், தமிழகத்துக்கு விநாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் காவிரியிலிருந்து திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.

இதனால் தட்சின கன்னடா, வட கன்னடா, உடுப்பி, ஷிமோகா உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, 500 இற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளன.

அத்தோடு, காவிரி நீர் ஓடும் பகுதிகளான குடகு, மைசூர், மாண்டியா, ராம்நகர், பெங்களுர் ஆகிய மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கும் நீர்வரத்து பன்மடங்காக அதிகரித்துள்ளது.

மேலும், கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம், வயநாடு மலைப்பகுதிகளில் தொடரும் மழையால் மைசூர் மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த கனமழையால், கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமா வதி உள்ளிட்ட 4 அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

குறிப்பாக கபினி, ஹாரங்கி ஆகிய இரு அணைகளும் முழுமையான நிர் கொள்ளளவை நெருங்கிவிட்டதாகவும் கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் 11 ஆண்டுகளுக்கு பிறகு 115 அடிக்கு உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளில் இருந்து விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடி நீர், காவிரியின் ஊடாகத் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

காவிரியின் இந்த வருகையை அடுத்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றமையால், தமிழக விவசாயிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)