Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓரின சேர்க்கையாளர்கள் விவகாரம் மீண்டும் நீதிமன்றில்!

In இந்தியா
Updated: 05:53 GMT, Jul 12, 2018 | Published: 05:53 GMT, Jul 12, 2018 |
0 Comments
1101
This post was written by : Kemasiya

ஓரின சேர்க்கையாளர்கள் விடயத்தில் உச்சநீதிமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டுமெனக் கூறி, மத்திய அரசு மீண்டும் இவ்விடயத்தை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளது.

குறித்த வழக்கு நேற்று (புதன்கிழமை) ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த வழக்கில் ஆதரவான அல்லது எதிரான எந்த தீர்ப்பாயினும், நாட்டில் குற்றச்செயல்களை ஏற்படுத்தாத வகையில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என, மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கு பின்னர் விசாரிக்கப்படும் எனக் கூறி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ்வழக்கு தொடர்பில் சோனல் மேத்தா (Sonal Mehta) என்ற சமூக ஆர்வலர், “ஒரு குடிமகனின் தனியுரிமையை பாதுகாப்பதில் அந்த நாட்டு அரசாங்கமே முடிவெடுக்க வேண்டும்” என நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு மாறான குற்றச்செயலென பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377ஆனது, ‘இயற்கைக்கு மாறான பாலுறவு’ தண்டனைக்குரிய குற்றம் என்கிறது.

இச்சட்டப் பிரிவு 1860ஆம் ஆண்டு பிரித்தானிய அரசின் ஆட்சிக்காலத்தில் அமுல்படுத்தப்பட்டது. எனினும் 2009 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில் 18 வயதிற்கு மேற்பட்டோர் இருவரின் விருப்பிற்கு இணங்க பாலியல் உறவு கொண்டால், அவர்களுக்கு இச்சட்டப் பிரிவு பொருந்தாதென தெரிவித்தது.

இந்நிலையில் இதற்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு தாம் வழங்கிய தீர்ப்பை தள்ளிவைத்த உச்சநீதிமன்றம், இச்சட்டத்தை திருத்துவதும், திரும்பப்பெறுவதும் அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் இது நீதித்துறையின் பொறுப்பல்ல என்றும் கூறியது.

எனினும் ஐந்து வருடங்களாகியும் இது தொடர்பில் முடிவெடுக்காத மத்திய அரசு, இதில் மத்திய அரசால் முடிவெடுக்க முடியாது, நீதிமன்றமே ஒரு முடிவுக்கு வரவேண்டும் எனக் கூறி மீண்டும் உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)