Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்ஸிட் நடைமுறைத்திட்டம் தயார்

In
Updated: 11:53 GMT, Jul 12, 2018 | Published: 05:26 GMT, Jul 12, 2018 |
0 Comments
1112
This post was written by : Varshini

ஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான புதிய நடைமுறைத்திட்டத்தை (brexit blueprint) வெளியிட தயாராகவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரெக்ஸிட் கொள்கைகள் தொடர்பான அமைச்சர்களின் உறுதிமொழிகளுடன் இந்த வரைபடத்தை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய வர்த்தக உடன்படிக்கைளை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட எதிர்கால வர்த்தக மற்றும் ஏனைய ஒத்துழைப்புகள் தொடர்பான விரிவான செயற்றிட்டமாக இந்த வரைபடம் அமையவுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கருத்துத் தெரிவித்த பிரெக்ஸிட்டின் புதிய செயலாளர் டொமினிக் ராப், கடந்த 2016ஆம் ஆண்டு பிரெக்ஸிட்டிற்கு மக்கள் வழங்கிய ஆணையை மதித்து வர்த்தக தேவைகளை நிறைவேற்றத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரித்தானியாவின் செயற்றிட்டமானது நடைமுறைக்கு சாத்தியமானதாக அமையவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்ஸிட் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக பிரித்தானியா தீர்மானித்துள்ளது.  பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, ஒன்றியத்துடனான எதிர்கால உறவுகள் தொடர்பில் உறுதியான உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரெக்ஸிட்டிற்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், அண்மையில் வெளியுறவுத்துறை செயலாளரர் பொரிஸ் ஜோன்ஸன் மற்றும் பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் ஆகியோர் தமது பதவிகளை  ராஜினாமா செய்திருந்தனர்.

பிரெக்ஸிட் தொடர்பாக பிரதமர் தெரேசா மே தீர்க்கமான முடிவுகளை எடுக்கவில்லையென தெரிவித்து இவர்கள் தமது பதவிகளை  ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)