Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் பகிஷ்கரிப்பு!

In இலங்கை
Updated: 05:45 GMT, Jul 12, 2018 | Published: 05:45 GMT, Jul 12, 2018 |
0 Comments
1066
This post was written by : Litharsan

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

கற்றல் செயற்பாடுகளிற்காக பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள், தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு தெரிவித்து பாடசாலையின் மைதானத்தில் இந்த பகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர். இதில் பெற்றோரும் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து தெரியவருவதாவது, நேற்று குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகள் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று வீடு திரும்பினர். அதன்போது அவர்கள் மீது பாடசாலை மைதானத்தில் இருந்த இளைஞர்கள் சிலரால் கல் வீசப்பட்டதில் மாணவியொருவர் காயமடைந்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து குறித்த மாணவியின் தந்தை அங்கு நின்ற இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் பின்னர் குறித்த மாணவியின் வீட்டிற்குச் சென்ற இளைஞர்கள் வீட்டினைத் தாக்கி சேதமாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாரிடம் மாணவியின் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் இளைஞர்கள் நின்று பாடசாலை மாணவிகள் மீது தகாத முறையில் நடந்துகொள்வதாகவும் அதிலிருந்து தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரியே இந்த பகிஷ்கரிப்பு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இதனிடையே கரைச்சி கல்விக் கோட்ட அதிகாரி மற்றும் பொலிஸார் குறித்த பாடசாலைக்குச் சென்று பேச்சு நடத்தினர். அப்போது இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாதவாறு நடவடிக்கை எடுப்பதாக பொலிஸாரால் உறுதி வழங்கப்பட்டதையடுத்து கற்றல் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)